கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வ தேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு தினத்தை ஒட்டி, இயற்கை பாதுகாப்பு குறித்த நிபுணர்கள் பங்கேற்று உரையாற்றும் நிகழ்வு நடை பெற்றது. இதில், இயக்குனர் அல்லி ராணி தலைமை தாங்கி நிலையான எதிர் காலத்திற்கு இயற்கைப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் புவி மாசுபாடு மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டி பள்ளிகளில் இயற்கை பாதுகாப்பு மற் றும் சுற்றுச்சூழல் பரா மரிப்பு குறித்து பாடத் திட்டங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியு றுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் லிட்டில் கிங்டம் சீனியர் செகண்டரி பள்ளி மற்றும் கோவை ஷிக்ஷிறிமிஷிஜிவி சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக வனவிலங்கு புகைப் படக்கலைஞர் விருது பெற்ற அருந்தவசெல்வன், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருக்கும் வனவிலங்குகளின் அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்சிப்படுத்தினார்.
காடுகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றிய விரிவான தகவல்களை தன் அனு பவத்தோடு பகிர்ந்து கொண்டார்.
பின்னர் ஆனைகட்டியில் உள்ள நீலகிரி பயோஸ்பியர் பூங்காவிற்கு SVPISTM மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.