உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, சீதாபதி மருத்துவமனை இலவச தாய்ப்பால் ஆலோசனை ஹெல்ப் லைனை “73056 44465” அறி முகப்படுத்தியது. இது தாய் மார்களுக்கு ஏற்படும் கேள்விகள் அல்லது கவலைகளை நிவர்த்தி செய்து, துல்லியமான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது.
இந்த ஹெல்ப் லைன் சான்றளிக் கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த பாலூட்டுதல் ஆலோசகர்களைக் கொண்டுள்ளது, மற்றும் 24 X 7 செய ல்படவுள்ளது.
இது புதிய மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலை மற்றும் பாலூட்டுதல் ஆகியவற்றுக்கு இடை யிலான சமநிலையைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண் டுள்ளது.
சீதாபதி மருத்துவமனை ‘தாய்மார் ஆதரவு மன்றம்’ ஒன்றையும் அறிமுகப்படுத்தியது. இது, தாய்மார்களுக்கு அவர்களின் குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் இரண்டாம் ஆண்டு வரை ஆதரவளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட் டுள்ளது.
இந்த மன்றம் புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பாலூட்டுவது தொடர்பான ஆதரவை வழங்கும், உணவளிக்கும் குறிப்புகளையும் வழங்கும்.
சமீபத்திய தரவுகளின்படி, தாய்ப்பா லூட்டும் விகிதங்களை மேம்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் 820,000 குழந் தைகளின் உயிரைக் காப்பாற்றும் எனத் தெரியவந்துள்ளது.