கள்ளக்குறிச்சி ( தனி) சட்டமன்ற தொகுதியின். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கு.மாலதியை ஆதரித்து ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நைனார்பாளையம், பெரிய சிறுவத்தூர், தென் கீரனூர், நீலமங்கலம், விருகாவூர், கூத்துக்குடி, தியாக துருகம் போன்ற பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் திட்டங்கள், கலைஞர் உரிமைத் தொகை, கலைஞர் கனவு இல்லம், நான் முதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை எடுத்து கூறி பிரசாரம் மேற்கொண்டார்.
பாஜகவிடம் அதிமுக அடிமையாகி உள்ளது. என்று விமர்சித்து, வேட்பாளருக்கு ஆதரவாக பானை, சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் (தெ) ரிஷிவந்தியம் திமுக வேட்பாளர் வசந்தம் க.கார்த்திகேயன், ஒன்றிய கழக செயலாளர் கள். மா.சத்தியமூர்த்தி, ம.கனகராஜ், தேர்தல் பொறுப்பாளர் என்.கே.சேகர், விசிகவின் மாநிலச் செயலாளர் சக்தி கிரி, மாவட்ட செயலாளர் இரா.மதியழகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



