fbpx
Homeதலையங்கம்அபாண்ட பழி - மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை?

அபாண்ட பழி – மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை?

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிறிஸ்தவப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.

கட்டாய மதமாற்ற முயற்சி காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அன்றைய பாஜக மாநில தலைவரான அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், மாணவி லாவண்யா மரணத்தில் எந்த விதமான கட்டாய மதமாற்ற முயற்சியும் நடக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரத்தை மத பிரச்சனையாக மாற்றிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை பேசியது அபாண்டமான பொய், அவதூறு. கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் மதமாற்றம் நடந்திருப்பதாக பழி சுமத்தி அக்கல்வி நிறுவனத்துக்கு தேவையில்லாத நெருக்கடி தரப்பட்டுள்ளது.

இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி திசை திருப்பும் முயற்சி நடந்திருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

எல்லா மக்களுக்கும் கல்வி போய் சேர வேண்டும். இதில் சாதி, மதத்திற்கு இடமே இல்லை. கிறிஸ்தவ மிஷினரிகள் சேவை மனப்பான்மையோடு ஆண்டாண்டு காலமாகக் கல்வியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த கல்வி நிறுவனங்களில் பிற மதங்களைச் சார்ந்த மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர். அதேபோன்ற கல்வி நிறுவனங்களைத் தொடங்கி சேவை புரிய எந்த அமைப்பும் முன்வரலாம்.

அரசியலுக்காக ஒரு கல்வி நிறுவனம் மீது வீண் பழி போடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதைத் தான் மைக்கேல்பட்டி சம்பவம் உணர்த்துகிறது.

ஒரு கல்வி நிறுவனத்தின் மீது அபாண்டமான பழி சுமத்தி அம்பலப்பட்டு நிற்கும் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்பாரா?

உண்மையை தோலுரித்துக் காட்டிய சிபிஐக்கு பாராட்டுகள்.

படிக்க வேண்டும்

spot_img