2026-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவை கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி (The Camford International School) மாணவர்கள் தங்கள் சிறப்பான கல்வித் திறனை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இந்த தேர்வை எழுதிய 92 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும்.
தேர்வில் கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி அளவில் சாதித்தவர்கள் விவரம் வருமாறு:
500 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் எஸ்.பிரஜேஷ் முதலிடம் பெற்று அசத்தி உள்ளார். 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று மெர்சில்லா ஃபெலிக்ஸ் இரண்டாம் இடத்தையும் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று எஸ்.மிர்நேந்ரா மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
பள்ளியில் பாடவாரியாக முதலிடம் பெற்றவர்கள்:
கணிதப் பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று மெர்சில்லா ஃபெலிக்ஸ், கே.ஹர்சில் போஹ்ரா, கிரிஷாய் கார்த்திக், எஸ்.பிரஜேஷ், எஸ்.மிர்நேந்ரா ஆகியோரும் ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று வி.ஏ.தியாகராஜன், மெர்சில்லா ஃபெலிக்ஸ் ஆகியோரும் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்று எஸ்.பிரஜேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று எஸ்.பிரஜேஷ், சமூக அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று மெர்சில்லா ஃபெலிக்ஸ், பிரெஞ்ச் பாடத்தில் 96 மதிப்பெண்கள் பெற்று ஆதித் கிருஷ்ணன், இந்தியில் 96 மதிப்பெண்கள் பெற்று குஷி பரத்வாஜ் ஆகியோர் முதலிடம் பெற்று சாதித்துள்ளனர்.
தமிழ்ப்பாடத்தில் மாணவர் எஸ்.பிரஜேஷ் சென்டம் மதிப்பெண் (100/100) பெற்று, கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளிக்கு பெருமை சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விடா முயற்சியுடன் கற்று சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள சாதனை மாணவர்களை கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கொடி அருள் ரமேஷ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டி, மாணவர்கள் தொடர்ந்து வெற்றிபெறவும், ஒரு பொன்னான எதிர்காலம் அமையவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தச் சிறப்பான தேர்வு முடிவுகள், கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோர்களின் உறுதுணையான ஆதரவு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.



