‘டிரினிட்டி கண் மருத்துவமனை – லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் புதிய கிளையை தொடங்கியுள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.மாதேஸ்வரன் கலந்து கொண்டு இம் மையத்தை திறந்து வைத்தார்.
லேசர் மூலம் பார்வை திருத்தும் லாசிக் சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலக்காட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், 27 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மருத்துவத் துறையில் சேவையாற்றி வருகிறது.
தற்போது, புதியதாக லட்சுமி மில்ஸ் கிளையையும் சேர்த்து மொத்தம் ஒன்பது மையங்கள் செயல்பட்டு வருகின்றன. டாக்டர் ஏ.கே.ஸ்ரீதரன் (தலைவர்), டாக்டர் சுனில் ஸ்ரீதர் (நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்), டாக்டர் மிருதுலா சுனில் (தலைமை மருத்துவ இயக்குநர்) ஆகியோர் தலைமையில் இம்மருத்துவமனை நிர்வகிக்கப்படுகிறது. 6,500 சதுர அடியில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மையத்தில் டாக்டர் மதுசூதன், டாக்டர் முகமது ஷாபாஸ், டாக்டர் ஏ.எம். மும்தாஸ், டாக்டர் பிரேம் ஜித் முரளிதரன், டாக்டர் ஜின்சி மரியா பால், டாக்டர் சிந்து ஜா முருகேசன், டாக்டர் சஞ்சனா எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்ட நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.
புதிய கிளை தொடக்கத்தை முன் னிட்டு ஜூன் 15 வரை சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச கண் பரிசோதனை ஆலோசனை, இலவச லாசிக் பரிசோதனை, லாசிக் அறுவை சிகிச்சைக்கு 25 சதவீத தள்ளுபடி
வழங்கப்படுகின்றன.
இது குறித்து நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர், கோவையில் தொடங்கப்பட்டுள்ள புதிய மையத்தின் மூலம் உலகத் தரமான கண் சிகிச்சையை அனைவருக்கும் எளிதில் வழங்குவதே எங்கள் நோக்கம், என்றார்.



