fbpx
Homeபிற செய்திகள்வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ‘தி பியர் ஹவுஸ்’ 2வது ஷோரூம் திறப்பு

வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ‘தி பியர் ஹவுஸ்’ 2வது ஷோரூம் திறப்பு

இந்தியாவின் முன்னணி நவீன ஆண்கள் ஆடை பிராண்டான ‘தி பியர் ஹவுஸ்’ சென்னையில் தனது 2-வது ஷோரூமை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் திறந்துள்ளது.

சுமார் 1,600 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை தமிழ் யூடியூபர் வி.ஜே சித்து திறந்து வைத்தார்.

நேர்த்தியாக தைக்கப்பட்ட சட்டைகள், விதவிதமான போலோ டீ-ஷர்ட்டுகள், டெனிம் ஜீன்ஸ்கள், வெளியே அணியும் பிரத்யேக ஆடைகள் மட்டுமல்லாமல் உங்களை அழகுபடுத்தும் ஏராளமான பொருட்கள் இங்கு உள்ளன.

திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 3 ஆடைகள் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும், 5 ஆடைகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடியும், 7 ஆடைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இதில் இணை நிறுவனர்களான ஹர்ஷ் மற்றும் தன்வி சோமையா ஆகியோர் கூறுகையில், ‘’தி பியர் ஹவுஸ்’ நிறுவனம் ‘தி யங் ஜென்டில்மேன்’ என்ற நவீன ஆண்களின் அடையாளத்தைக் கொண்டாடுகிறது.

தரமான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதில் ‘தி பியர் ஹவுஸ்’ தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

‘தி பியர் ஹவுஸ்’, இன்றைய இளம் தலைமுறையினரின் மனதைக் கவர்ந்துள்ளது” என்றனர்.

சென்னை பீனிக்ஸ் மால் மார்க்கெட்டிங் பொது மேலாளர் மிலி முகர்ஜி, நவீன கால ஆண்களுக் கான ஆடைகள் ‘தி பியர் ஹவுஸ்’ ஷோரூமில் ஏராளமாக உள்ளன, என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img