fbpx
Homeதலையங்கம்மீண்டும் வருகிறதுபழைய ஓய்வூதிய திட்டம்?

மீண்டும் வருகிறதுபழைய ஓய்வூதிய திட்டம்?

2003 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையிலேயே பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. 2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்குக் கிடைத்த ஆரம்ப வெற்றியாக தற்போது பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆராய மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த குழு ஒன்பது மாதங்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை 9 மாதத்திற்குள் அரசிற்கு அளித்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசு ஊழியர்களின் மனதில் நீண்ட நாள் கோரிக்கை செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.

இன்றைக்கு குழு அறிவிப்பிற்காக வரவேற்பை நல்கும அரசு ஊழியர்கள், விரைவில் நன்றி தெரிவித்து பாராட்டும் வகையில் நற்செய்தி வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. பழைய ஓய்வூதியத் திட்டமே அமலுக்கு வரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img