தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி சிறப்படைய ரூ.1 லட்சத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ ஆகியோர் வழங்கினர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நாமக்கல், கொங்கு திருமண மண்டபத்தில் பிப்ரவரி 10-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசுத் துறைகளின் பணி விளக்க அரங்குகள், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்டவை புத்தகத் திருவிழாவில் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.