fbpx
Homeதலையங்கம்சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் கடினமான பணியை முதன்மையான பணியாக கருதி அதற்கு முக்கியத்துவத்தை தமிழக அரசு கொடுத்தது பலவித பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அவ்வப்போது போதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்து தேவையான தளர்வுகளையும் அறிவித்து சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க வழி ஏற்படுத்தியது; பொதுமக்களின் குறையை தீர்க்கும் வகையில் தனிப்பிரிவை ஏற்படுத்தியது;

தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற முயற்சி எடுத்தது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருவது, நிதி நிலை பட்ஜெட்டுக்கு முன்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டது, விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேளாண்மை பட்ஜெட் அறிவித்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் இந்த அரசு இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை.

ஆரம்பமே அமர்க்களம் தான் என்று சொல்லப்படுவது இறுதி வரைக்கும் தொடரவேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img