Homeபிற செய்திகள்தூத்துக்குடி ரேஷன் கடையில் கிலோ ரூ.30க்கு சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர் விஷு...

தூத்துக்குடி ரேஷன் கடையில் கிலோ ரூ.30க்கு சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர் விஷு மகாஜன்

தூத்துக்குடி மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கிலோ ரூபாய் 30க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்க விழா நடந்தது. நுகர்வோருக்கு அரிசி வழங்கி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துவக்கி வைத்தார்.
மேலும் சன்னரக அரிசி ரூ.30- க்கும், தமிழக அரசின் அதிரடி விலை குறைப்பு மூலம் புழுங்கல் பொன்னி அரிசி- ரூ.60, துவரம்பருப்பு -ரூ.130. உளுத்தம் பருப்பு -ரூ.140, பூண்டு -ரூ.240. மல்லி (தனியா) – ரூ.240, மிளகாய் ரூ.330 என சுமார் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஒ.961 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, ஒ.947 மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலை, டி சி 26 ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, இ இ 400 துறைமுக சபை ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, ஒ.1020 தூத்துக்குடி கூட்டு றவு பண்டகசாலை ஆகிய இடங்களில் கிடைக்கும். இவற்றை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளது. இந்நிகழ்வில் இரா.இராஜேஷ், பொதுவிநியோக திட்ட துணைபதிவாளர் அ.சுப்புராஜ், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் மு.கலையரசி, மண்டல துணை மேலாளர் சிவகுமார். பண்டகசாலையின் செய லாட்சியர் வெ.பால முருகன் வட்டாச்சியர் ஞான ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img