Homeபிற செய்திகள்தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.18,400 கோடி முதலீடு

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.18,400 கோடி முதலீடு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை சர்வதேச தரத்திலான சரக்குப் பெட்டகத் துறைமுகமாகவும், பசுமை எரிசக்தி மையமாகவும் மேம்படுத்த மத்திய அரசு ரூ.18,400 கோடி மதிப்பிலான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.


இதில் ரூ.17,167 கோடியில் வெளித்துறைமுக மேம்பாட்டுத் திட்டம், ரூ.520 கோடியில் 7-ம் எண் தளத்தில் சரக்குப் பெட்டக முனையம், ரூ.750 கோடியில் கடல்சார் காற்றாலை முனையம் ஆகியவை அடங்கும்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலர் விஜய் குமார், துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும், தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையப் பயன்பாட்டுக்காக 13 மின்சார லாரிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டங்கள் தென் தமிழகத்தின் பங்கை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img