Homeபிற செய்திகள்ஈரோட்டில் சலங்கை பூஜை விழா

ஈரோட்டில் சலங்கை பூஜை விழா

விஜயதசமி விழாவை யொட்டி, ஈரோடு கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம், கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப் பயிற்சிப் பள்ளி சார்பில், ஈரோடு கொங்கு கலையரங்கில் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.
விழாவுக்கு வந்திருந்தவர்களை கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்றார். உதயம் ஸ்டோர்ஸ், கீர்த்தனா டிரேடர்ஸ் உரிமையாளர் வி.செல்வம் முன்னிலை வகித்தார்.
கொங்கு கலையரங்கத் தலைவர் ஆர்.சுப்பிர மணியம், செயலர் ஹரிராம் சந்துரு, பொருளாளர் எஸ். சதாசிவம், அருள் சித்தா மருத்துவமனை மருத்துவர் அருள் நாகலிங்கம் ஆகியோர் விழாவுக்குத் தலைமை வகித்தனர்.
சென்னை ஆவடி காவல் இணை ஆணையர் டாக்டர் ஆர்.சிவகுமார், அவரது மனைவி ஸ்ரீவித்யா சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
பரதநாட்டியக் கலைஞர் அகிலா தலைமையில், மாணவிகள் ஸ்ரீநிதி, இனியா, லக்ஷிதா, அனுமித் ரா, வர்ஷிகா ஆகியோர் சலங்கை பூஜை விழாவில் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். நிறைவில், கவிதாலயம் மகளிர் அணித் தலைவி வெண்ணிலா பெரியசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img