திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற புதுமைத் திட்டத்தை அறிவித்து 100 நாட்களில் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆட்சிக்கு வந்து முதல்வர் ஆனதும் அந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு வெற்றியும் பெற்றார். பொதுமக்களின் கோரிக்கைகளை ஆய்ந்து அவற்றை செவ்வனே நிறைவேற்றித் தந்தார். அந்த மக்கள் பணியை தொடர்ந்து வருகிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்` என்பது போன்ற பல செயல்பாடுகள் மூலம் மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு அவர் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறார். அந்தப்பணியில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
அதன் ஒரு அம்சமாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறும் கடிதம் அது. தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை பட்டியலிட்டு அனுப்புமாறு அதில் அவர் கோரி இருக்கிறார்.
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே இந்த கடிதத்தின் நோக்கம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சி மட்டும் அல்ல, அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் எழுதி உள்ள இந்த கடிதம், ஓர் முத்தான கடிதம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் இது.
எந்த முதல்வரும் சிந்திக்காத கோணங்களில் சிந்தித்து செயலாற்றுபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
அதோடு, மக்கள் பணி என்கிற மகுடத்தைச் சூடியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைக்கு கோவை மாநகருக்கு வருகை தந்துள்ளார்.
ஒரே நிகழ்வில் 1,07,069 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்தி உள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல, மகத்தான மக்கள் பணி. இந்த விழா நாட்டின் மிகப்பெரிய, மிகச்சிறந்த அரசு விழா என்றால் மிகையாகாது.
இதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒரு சாதனை தான். அவரை முதல்வராகப் பெற்றதற்கு தமிழகமே பெருமை கொள்கிறது; வாழ்த்துகிறது!



