fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா ஐ.ஜி. ரம்யா பாரதி சிறப்புரை...

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா ஐ.ஜி. ரம்யா பாரதி சிறப்புரை ஆற்றினார்

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2026&-27ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த இளநிலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி, முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. முதல் ஆண்டு மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அன்புடன் வரவேற்கும் வகையில் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் ஆர்.நந்தினி வரவேற் புரையாற்றி, புதிய மாணவிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித் ததுடன் கல்விசார் சிறப்பும் முழுமையான ஆளு மை வளர்ச்சியும் கொண்ட கல்லூரியின் பாரம்பரியத்தை எடுத்துரைத்தார்.
கல்லூரி செயலாளர் முனைவர் என்.யசோதாதேவி, புதிய மாணவிகளை வரவேற்று, அவர்களின் கல்விப் பயணத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் பி.பீ. ஹாரதி கல்லூரியின் வரலாறு, கல்விசார் சாதனைகள், தொழில்துறை இணைப்புகள், ஆராய்ச்சி முன்னேற்றங்கள் மற்றும் மாணவியர் மையப்படுத்தப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து விரிவாக அறிமுகப்படுத்தினார்.
காலை அமர்வில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.வி.ரம்யா பாரதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவிகள் தன்னம்பிக்கை, நேர்மை, மன உறுதி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சென்னை EC Group International நிறுவனத்தின் மனிதவளத்துறை நிர்வாக துணைத் தலைவர் டேனியல் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வேலைவாய்ப்புத் திறன்கள், தொழில்முறை திறன்கள் மற்றும் நிறுவன உலகின் தற்போதைய எதிர்பார்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்தார்.
இந்திய கைப்பந்து வீராங்கனை ஷீபா சுரேஷ் சிறப்புரையாற்றி, விளையாட்டுத் துறையில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து, விடாமுயற்சி, குழுப்பணி மற்றும் அர்ப் பணிப்பு மனப்பான்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும்,QS I-GAUGE அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரவின் நாயர், இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கல்லூரியின் கல்வித்தரம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தினைப் பாராட்டினர்.
பிற்பகல் அமர்வில், பிரிகால் ஹோல்டிங் நிறுவனத் தலைவர் மற்றும் சிறுதுளி அமைப்பின் இணை நிறுவனர் வனிதா மோகன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் உரையாற் றினார். தலை மைத்துவ பண்புகள், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் Startup India (DPIIT) அமைப்பின் தலைவர் மமதா வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொடக்க நிறுவனங்களின் வாய்ப்புகளை மாணவியர்கள் ஆராய வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

தமிழ்நாடு மேம் பட்ட உற்பத்தித் தொழில் நுட்ப சிறப்பு மையத்தின் தொழில்நுட்ப துணைத் தலைவர் ராஜா சுப்பிரமணியன் சிறப்புரையாற்றி, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் துறைக்கான தயார்நிலை மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்பு களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கல்லூரியின் உள்தர உறுதிப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.பால விஜயலட்சுமி நன்றியுரை யாற்றினார்.
அதைத் தொடர்ந்து, புதிய மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img