fbpx
Homeபிற செய்திகள்நந்தா சித்த மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

நந்தா சித்த மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

நந்தா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கி வரும் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான நந்தா சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் தேசிய ஆணையத்தின் யுனானி, சித்தா மற்றும் சோவா ரிக்பா பிரிவின் முன்னாள் தலைவர் மருத்துவர் கே. ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தரவரிசையில் இடம் பெற்ற 3 மாணவர்கள் உட்பட 50 மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேருரையாற்றினார்.

இவ்விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மருத்துவர் எம்.மேனகா வரவேற்றார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ். திருமூர்த்தி. முதன்மை நிதி அலுவலர் ஏ. சிவப்பிரகாசம் மற்றும் கல்லூரியின் நிர்வாக அலுவலர் முனைவர் ஜீ.தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img