fbpx
Homeபிற செய்திகள்சம்பளக் கணக்கு துவங்கிய ஒரே மாதத்தில் உயிரிழந்த கோவை வனத்துறை ஊழியர் குடும்பத்துக்கு பேங்க் ஆஃப்...

சம்பளக் கணக்கு துவங்கிய ஒரே மாதத்தில் உயிரிழந்த கோவை வனத்துறை ஊழியர் குடும்பத்துக்கு பேங்க் ஆஃப் பரோடா ரூ.15 லட்சம் இழப்பீடு

கோவை வனத்துறை ஊழியர் குடும்பத்துக்கு இறப்பு காப்பீட்டுத்தொகையாக ரூ.15 லட்சத்தை பேங்க் ஆஃப் பரோடா வின் கோவைமண்டல அலுவலகம் வழங்கியுள்ளது.
தமிழக அரசு ஊழி யர்கள் சம்பள கணக்கு காப்பீட்டுத் தொகை திட்டத்தின் கீழ், அவர்கள் பணியின்போது உயிரிழந் தால் அவர்களின் குடும்பங்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. அதன்படி, தங்கள் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருந்த கோவை வனத்துறை ஊழியர் ஞானசேகரன் சமீபத்தில் உயிரிழந்தார்.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினரிடம் ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கோவை மண்டலத் தலை வரும் துணைப் பொது மேலாளருமான கமலக்கண்ணன், பிராந்திய அலுவலக முதன்மை மேலாளர் குமரகுரு மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், கோவை மாவட்ட வன அலுவலர் வழங்கினார்.

ஊழியர் ஞானசேகரன் தனது பேங்க் ஆஃப் பரோடா கணக்கில் ஒரே ஒரு மாதத்திற்கான ஊதியத்தை மட்டுமே பெற்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக காலமானார். கணக்குத் தொடர்பு மிகக் குறுகிய காலமாக இருந்த போதிலும், ஊதியத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையை அவரது குடும்பத்தினருக்குத் தாமதமின்றி பேங்க் ஆஃப் பரோடா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மண்டல அலுவலகத்தின் துரிதமான அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் மூலம் இந்த இழப்பீட்டுத் தொகைக்கான நடைமுறைகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் இந்த செயல்பாட்டை வனத்துறையினர் பாராட் டினர்.

படிக்க வேண்டும்

spot_img