fbpx
Homeபிற செய்திகள்இளையபெருமாள் 102வது பிறந்த நாள் விழா சிலைக்கு அமைச்சர் ப.ராஜ்குமார் மரியாதை

இளையபெருமாள் 102வது பிறந்த நாள் விழா சிலைக்கு அமைச்சர் ப.ராஜ்குமார் மரியாதை

கடலூர் மாவட்டத்தில் எல்.இளையபெருமாள் 102-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எல்.இ.ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் எல்.இளையபெருமாள் 102-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, சிதம்பரத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிறப்புமிக்க இளைய பெருமாளின் சமூக தொண்டினை போற்றும் வகையிலும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறிடும் வகையிலும் தமிழக அரசின் சார்பில் ரூ.5.7 கோடி மதிப்பீட்டில் சிதம்பரத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிதம்பரம் பொறுப்பு தனலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img