முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று & தமிழ்நாட்டில் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி அளித்து அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
27,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் புதிய மின்சார வாகனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 10 நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசின் பணியில் ஆளுநரின் குறுக்கீடு, அமலாக்கத்துறை ரெய்டு, வாய்க்கு வந்தபடி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களின் சீண்டல் பேச்சுகள்… இதையெல்லாம் தாண்டி, தமிழ்நாடு உச்சபட்ச வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதற்கு ஒரேநாளில் 10 முக்கிய தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டு இருப்பதே அத்தாட்சி. இது தான் ரியல் வளர்ச்சி.
வளர்ச்சியில் தற்போது 2வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு முதலிடத்திற்கு வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை!