fbpx
Homeதலையங்கம்மின்துறை அமைச்சரின் ஒளிரும் அறிவிப்புகள்!

மின்துறை அமைச்சரின் ஒளிரும் அறிவிப்புகள்!

தமிழ்நாட்டில் வீடுகளில் மின்நுகர்வைக் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. முதலில் சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் சுமார் 1.10 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது.

இதை அடுத்து சென்னையின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் தமிழ்நாடு முழுக்கவும் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது மின்சாரத்தை கணக்கிட அதற்காக மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து அளவீடு செய்வார்கள். அவர்கள் கொடுக்கும் குறிப்பை வைத்தே மின்சாரம் நுகர்வு அளவு கணக்கிடப்படும். ஆனால் ஸ்மார்ட் மீட்டர் அப்படி அல்ல.

ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால் நாம் பயன்படுத்தும் மின்சாரம் தொடர்பான ரீடிங் நமக்கு காட்டுவது மட்டுமின்றி மின்சார துறை அலுவலகத்திற்கும் காட்டும். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இது துல்லியமாக அப்டேட் செய்யப்படும். இதனால் மின்சார ஊழியர்கள் வீட்டிற்கு வராமலே அளவு எடுக்க முடியும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொருத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

-ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதா மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும். இரவு நேரங்களில் 20 சதவிகிதம் கூடுதல் மின்சார கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது.

இப்படி… தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மின்சார அலுவலகங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது.

மின்துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில்பாலாஜி முயற்சியால் தமிழ்நாட்டில் கடும் கோடையிலும் மின்வெட்டு அறிவிக்கப்படவில்லை. நுகர்வோர் பாதிக்கப்படாத அளவில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்ததற்காக… வருவதற்காக அவரைப் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

தற்போதைய மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன் பணியை வேகப்படுத்தி இருக்கிறார். மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்பதில் ஐயமில்லை.
ஒளிரட்டும் தமிழ்நாடு!

படிக்க வேண்டும்

spot_img