ஊட்டியின் மையப் பகுதியில் உள்ள புது அக்ரஹாரம் அருள்மிகு வேணு கோபால சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் மகாகும்பாபிஷேக விழா கடந்த 26 ஆம் தொடங்கியது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் மணிகண்டன், தக்கார் ஜெகநாதன், செயலாளர் ஹேமலதா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை தலைமை அர்ச்சகர் விநாயகம் தலைமையில் வேணுகோபாலசாமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் மற்றும் பட்டாச்சாரிகள் கும்பாபிசேகத்தை நடத்தி வைக்க இருக்கின்றனர்.