பத்ம விபூஷன் – பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த பீல்டு மார்ஷல் மானெக்ஷாவின் 15 வது நினைவு தினத்தை முன்னிட்டு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் மற்றும் ஸ்டேஷன் தலைமையகம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஊட்டியில் உள்ள பார்சி ஜோராஸ்ட்ரியன் கல்லறை தோட்டத்தில் உள்ள நினைவிடத்தில் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.