Homeபிற செய்திகள்கோவையில் ‘செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்’ தொடக்கம்

கோவையில் ‘செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்’ தொடக்கம்

தொழில்துறை–கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், புரோட்டிவிட்டி இந்தியா, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், இன்சைட்வெர்ஜ் டெக்னாலஜிஸ் ஆகியவை இணைந்து கோவையில் ‘செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை’ தொடங்கியுள்ளன.
இதற்காக பி.எஸ்.ஜி. ஐடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைக்கும், புரோட்டிவிட்டி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில்துறை–கல்வித்துறை கூட்டாண்மை மூலம் இளம் தலைமுறையினரை பணிச்சூழலுக்கு தயார்படுத்த முடியும் என புரோட்டிவிட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் அகர்வால் தெரிவித்தார். இந்த கூட்டாண்மை மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என பி.எஸ்.ஜி. ஐடெக் முதல்வர் டாக்டர் என்.சரவணகுமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img