திருப்பூர் மாநகராட்சி 30வது வார்டு ராமமூர்த்தி நகரில் 80வது சுதந்திர தினத்தையொட்டி, 25-வது ஆண்டு கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவை சக்திவேல் தொடங்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் புஷ்பலதா தங்கவேலன், தங்கவேல், பழனிச்சாமி, கமல், சிவகிருஷ்ணன், குமார், கருப்பசாமி, பிரபு, சுரேஷ், ஜோதி, பானு, திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.மு.க, அ.தி.மு.க,
தவெக, காங்கி ரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். விழாவையொட்டி 50 பெண்கள் பங்கேற்று கோலப்போட்டி நடத்தினர். மேலும், 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன.



