fbpx
Homeபிற செய்திகள்சேலம் பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் பேச்சு போட்டி : 523 மாணவ, மாணவிகள் பங்கேற்று...

சேலம் பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் பேச்சு போட்டி : 523 மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தல்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக அண்மையில் சேலத்தில் உள்ள பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இப் போட்டிகளை நடத்தியது.

இதில் ஓவியப்போட்டியில் 208 மாணவர்களும், பேச்சுப்போட்டியில் 204 மாணவர்களும், கட்டுரை போட்டியில் 111 மாணவர்களும் என சேலம், நாமக்கல், தர்மபுரி, ஓசூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 523 மாணவர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசிய சேலம், அஸ்தம்பட்டி ரேஞ்ச் காவல் துறை உதவி ஆணையர் லக்ஷ்மி பிரியா, “மாணவர்கள் முதலில் போட்டிகளில் பங்கேற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசுகள் கிடைக்காவிட்டாலும் பரவா யில்லை. பங்கேற்பது மிக முக்கியம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img