கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவு தேசியத் தலைவர் நாராயணன் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினார்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மாணவிகள் திறமைகளை சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் பயன் படுத்த வேண்டும் என்றார்.
முதல்வர் கி.சித்ரா, கல்லூரி மாணவிகளின் சாதனைகளை பாராட் டினார். இளநிலை, முது நிலைப் பிரிவுகளில் 634 மாணவிகள் பட்டம் பெற்றனர். 4 தங்கப்ப தக்கங்கள் உட்பட பல்க லைக்கழக அளவில் 12 சிறப் பிடங்களை மாணவிகள் பெற்றுள்ளனர். கல்லூரி செயலர் சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.



