புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞருக்கு ‘டைலேட்டட் கார்டியோமையோபதி’ காரணமாக இதயச் செயலிழப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, இதய மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் இதயம் தானமாக கிடைத்த நிலையில், கொடையாளர் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட இதயம் 20 நிமிடங்களில் சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை சிம்ஸ் மருத்துவர்களால் வெற்றிகரமாக முடிந்தது. டாக்டர் பாஷி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதில் டாக்டர்கள் ராஜீவ் திலக் செல்லசாமி, முகமது இப்ராஹிம், ஷில்பா மேனன், அஜு ஜேக்கப், அருண்குமார், கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



