உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, கோவை வனத்துறை சார்பில் யானைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.


தமிழ்நாடு வனத்துறையின் கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகம், வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT), ஆசிய யானைகள் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்திய இப்பேரணி, கோவை மாவட்ட வன அலுவலக வளாகத்தில் தொடங்கியது.


ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும், தலைமை வனப் பாதுகாவலருமான வெங்கடேஷ் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, யானைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவியரிடையே அவர் சிறப்புரையாற்றினார்.

உதவி வனப் பாதுகாவலர் சௌமியா, கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், ரத்தினம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.



