fbpx
Homeபிற செய்திகள்2040-ல் சந்திரனில் தொழிற்சாலை அமையும்: விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை பேச்சு

2040-ல் சந்திரனில் தொழிற்சாலை அமையும்: விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை பேச்சு

சந்திரனில் உள்ள ஹீலியம் 3 என்ற அரிய வேதிப் பொருளை பூமிக்கு கொண்டுவர வரும் 2040- இல் இந்தியா அங்கு தொழிற்சாலை அமைக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை பேசினார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நடைபெற்று வந்த ஈரோடு புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்வுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.

மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜி.ஜவகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.சம்பத், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம், மாவட்ட நூலக அலுவலர் இரா.யுவராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

நிறைவு விழா சிறப்புரையாற்றிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை பேசியதாவது: புத்தகங்களை தொடர்ந்து படிக்கும்போது அறிவு வளர்ந்து கொண்டே போகும். வாழ்க்கை முன்னேற்றத் தில் பிரச்னைகளை எவ்வாறு சமாளிப்பது என்ற அறிவுரை அளிப்பதும் புத்தகங்கள்தான். இப்போது குழந்தைகள் இணையத்தில் மூழ்கி உள்ளனர்.

ஆனால் புத்தகத்தைப் படிப்பதில் கிடைக்கும் அறிவு, இணையத்தில் கிடைக்காது. இதனால் புத்தகம் படிக்க குழந்தைகளை பெற்றோர்கள் தூண்ட வேண்டும். அறிவியல், கணிதம் என எந்த துறையாக இருந்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமாக இருந்தது நம் நாடுதான்.
ஐரோப்பாவில் கி.பி 1200- க்கு பிறகு தான் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தொடங்கினர்.

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா விண்வெளி ஆய்வில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. விரைவில் சந்திராயன் 4 செயற்கைகோளை சந்திரனுக்கு அனுப்பி அங்கிருந்து மண் மாதிரியை எடுத்துவர உள்ளோம். மனிதனை சந்திரனுக்கு எவ்வாறு அனுப்புவது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

2040- இல் இந்திய நாட்டை சேர்ந்தவா சந்திரனில் ஒரு தொழிற்சாலை அமைக்க உள்ளார். பூமியில் எங்கும் கிடைக்காத அரிய பொருளான ஹீலியம் 3 சந்திரனில் உள்ளது. அணு சக்திக்கான யுரேனியம் பயன்படுத்தும்போது கதிர்வீச்சு ஏற்படும். ஆனால் ஹீலியம் 3 இல் கதிர்வீச்சு இல்லை. யுரேனியத்தை விட 3 மடங்கு சக்தியை கொடுக்க கூடியது. இந்த ஹீலியம் 3 யை பூமிக்கு கொண்டு வருவதற்கான தொழிற் சாலை 2040- இல் அமையும்.

ஏவுகணை தயாரிப்பில் உலக நாடுகள் இந்தியாவின் சாதனையை 25 ஆண்டுகளுக்கு பிறகும் முறியடிக்க முடிய வில்லை.

விண்வெளி ஆராய்ச்சியில் அப்துல் கலாம் போன்ற தமிழகத்தை சேர்ந்த பலர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். மக்கள் சிந்தனைப் பேரவை துணைத் தலைவர் கோ.விஜயராமலிங்கம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img