திண்டுக்கல் மாவட்டத்தின் குடி தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர் திட்டங்கள் கொண்டுவர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கன்னிவாடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்தார். வைகை அணையிலிருந்து குடி தண்ணீர்கொண்டுவரும் திட்டம், காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என்றார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை தாங்கினார். துணை ஆட்;சியர் சமூக பாதுகாப்பு தி;ட்டம் ஹென்றி பீட்டர், மாவட்ட சமூக நல அலுவலர் கரோலின் செல்வராணி, மாவட்ட குழந்தைகள் வளர்;ச்சித்திட்ட அலுவலர் இரா.காந்திமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகுமார், பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ஜஸ்டீன் சாத்தப்பா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ) சக்திவேல், கன்னிவாடி பேரூராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி சண்முகம், துணைத்தலைவர் கீதா முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பழனிவேலு வரவேற்று பேசினார். முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை குடி தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
இதை போக்க வைகை அணையிலிருந்து குடி தண்ணீர் கொண்டுவரும் திட்டமும். காவிரியிலிருந்து குடி தண்ணீர் கொண்டுவரும் திட்டமும் உள்ளது.
இதற்காக ஆயிரம் கோடி நிதி வேண்டி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை 12-ம் வகுப்பு படிப்புடன் நிறுத்திவிடக்கூடாது. உயர் கல்வி கற்கும் அளவிற்கு படிக்க வைக்க வேண்டும், குறிப்பாக நகரங்களுடன் இணைந்த கிராமப் புறங்களில் குப்பை கழிவுகள் அதிகம் தேங்குகின்றன.
இதை தவிர்க்க பொதுமக்களாகிய நீங்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான சுகாதாரமான இடத்தில் நாம் வாழும் நிலைமை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 16 பயனாளிகளுக்கு ரூ.9,70,000 மதிப்பீட்டிலான நத்தம் இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெறுவதற்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்பு துறையின் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 15 பயனாளிகளுக்கு ரூ.3,33,750 மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.80,400 மதிப்பீட்டிலான புதிய குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், 1 பயனாளிக்கு ரூ.33,603 மதிப்பீட்டிலான நுண்ணீர் பாசனத் திட்ட கடனுதவிகளையும் மற்றும் பரப்பு விரிவாக்கம் திட்டத்தின் கீழ், 1 பயனாளிக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலான குழித்தட்டு தக்காளி நாற்றுகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், 1 பயனாளிக்கு ரூ.1,400 மதிப்பீட்டிலான தக்கைபூண்டுகளையும் (20 கி.கி) மற்றும் 1 பயனாளிக்கு ரூ.675 மதிப்பீட்டிலான சிறுதானிய நுண்ணுரங்களையும் (12.5 கி.கி) என மொத்தம் 45 பயனாளிகளுக்கு
ரூ.14,39,828 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
முகாமில் திண்டுக்கல் மேற்கு மண்டல துணை வட்டாட்சியர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர்கள் சிவநேசன், கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், சூசை குணசேகரன், கன்னிவாடி பேரூராட்சி தலைமை எழுத்தர் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக திண்டுக்கல் மேற்கு தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.



