fbpx
Homeபிற செய்திகள்100% வாக்குப்பதிவு: மாணவர்கள் உலக சாதனை

100% வாக்குப்பதிவு: மாணவர்கள் உலக சாதனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, தலைமையில், ஈரோடு சிட்டி சிபிஎஸ்இ சென்ட்ரல் பள்ளியில் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் உலக சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது.

இமயம் டிரஸ்ட், அல்-அமீன் கல்வி நிறுவனங்கள், வாசவி கல்லூரி, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தா மகளிர் கல்லூரி, ஜூனியர் ரெட் கிராஸ் உள்ளிட்ட பல கல்வி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, இரண்டு உலகச் சாதனைகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.

முதலாவது சாதனையாக, 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கைவிரல் அச்சுக்களை பயன்படுத்தி, 18 மீட்டர் உயரமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட (270 சதுர மீட்டர்) தமிழ்நாடு வரைபட ஓவியம் உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய கைவிரல் அச்சு ஓவியமாக பதிவாகியுள்ளது.

இரண்டாவது சாதனையாக, 60,000க்கும் மேற்பட்ட ஒரிகாமி இதயங்களை கொண்டு, 21 மீட்டர் உயரமும் 17.5 மீட்டர் அகலமும் (367.5 சதுர மீட்டர்) கொண்ட தமிழ்நாடு வரைபடம் வடிவமைக்கப்பட்டது. இந்த படைப்பும் உலகச் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியின் தாளாளர் டாக்டர் கே.எம்.அபுல் ஹசன், தலைவர் ச.ஆஷிக் முகம்மது, பொருளாளர் ஹசீனத்துல் ஷஃபீக்கா, பள்ளியின் முதல்வர் தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் குழு நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இந்த உலகச் சாதனையை ஏற்று Elite World Records, Asian Book of Records, Indian Book of Records, Tamilan Book of Records ஆகிய அமைப்புகள் சான்றளித்தன.

படிக்க வேண்டும்

spot_img