கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரியநாயக்கன்பாளையம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கஸ்தூரிபாளையம், குப்பிச்சி பாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்த அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வரவேற்பு வழங்கினர்.
அவருடன் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர்.
பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர் அருண்குமார், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வரவும், மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் இந்த தொகுதிக்கு வரவும் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்“என கேட்டுக் கொண்டார்.
திமுக ஆட்சி சட்டம், ஒழுங்கு சரியில்லாத ஆட்சி. இது அகற்றப்பட வேண்டிய ஆட்சி. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பி, எடப்பாடியை கோட்டைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் பிஆர்ஜி.அருண்குமார் தெரிவித்தார்.



