பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி யின் 87-வது நிறுவன நாள் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் திருப்பூர் ஈஸ்டர்ன் குளோபல் க்ளோதிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கிரிராஜ் வரவேற்றார்.
விழாவில், இந்திய ஜவுளி ஆணையர் அலுவலக இயக்குனர்.

டி. ரவிக்குமார், டான்ஜெட்கோ உதவிச் செயல் பொறியாளர் வி.டி.சாந்தி, கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி டி.தியாகராஜ் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் துணை இயக்குனர் பாக்யலட்சுமி கோபிநாதன் ஆகிய நான்கு சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் குமார் துரைசாமி, முன்னாள் மாணவர்களை கௌரவிக் கும் கல்லூரியின் முயற்சி மற்ற கல்வி நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.



