கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.54 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் மற்றும் நிறைவடைந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப் பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நபார்டு திட்டத்தில் ரூ.97 லட்சத்தில் மேம் படுத்தப்பட்ட குமாரபாளையம்- ஜெ.ஜெ.நகர் சாலை மற்றும் ரூ.1.05 கோடியில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவ லகக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து இ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்ப ஆவணங்களை தவறின்றி பதிவேற்றம் செய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அன்னூர் வட்டாட்சியர் அலுவல கம், நியாய விலைக் கடை, சமூகநீதி மாணவர் விடுதிகள் ஆகியவற்றில் பதிவேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம், மாணவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இறுதியாக, கஞ்சப்பள்ளி–செங்காளிபாளையம் இடையே நபார்டு திட்டத்தில் ரூ.52.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலைப் பணியின் தரம் மற்றும் முன்னேற்றத்தையும் பார்வையிட்டார்.



