fbpx
Homeபிற செய்திகள்காந்தி நினைவு அருங்காட்சியக பணிகள் ஆய்வு: கலெக்டர்

காந்தி நினைவு அருங்காட்சியக பணிகள் ஆய்வு: கலெக்டர்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டடங்கள் வட்டம் மற்றும் கட்டட மையம், பாதுகாப்பு கோட்டம் சார்பில் ரூ.10.25 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட்ட அவர், கட்டடத்தின் பாரம்பரியத் தோற்றம் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

கட்டுமானப் பணிகள் நிறைவ டைந்துள்ள நிலையில், மீதமுள்ள மின்சாரம் மற்றும் காட்சியகப் பணிகளை உயர்தரத்துடன் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மகாத்மா காந்தியின் நினைவுகளைப் பிரதிபலிக்கும் அரிய காட்சிப் பொருட்களை பாதுகாப்பாகப் பராமரித்து நேர்த்தியாகக் காட்சிப்படுத்தவும் வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img