fbpx
Homeபிற செய்திகள்கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் ‘கிராப்ட் பஜார் 2026’ கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் ‘கிராப்ட் பஜார் 2026’ கைவினைப் பொருட்கள் கண்காட்சி

கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை துவங்கியது. ஜூலை 21ம் தேதி வரை நடைபெறும் இந்த ஆறு நாள் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருள் தயாரிப்பாளர்கள் தங்க ளது படைப்புகளை காட் சிப்படுத்தி விற்பனை செய் கின்றனர்.

கண்காட்சியில் சந்தேரி, ஜாம்தானி, பட்டன் படோலா, மதுரை சுங்குடி, காடி, கலம்காரி உள்ளிட்ட பாரம்பரிய நெசவுப் பொருட்கள், மூங்கில் மற்றும் பிரம்புக் கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், பித்த ளைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், தோல் பைகள், ராஜஸ்தானி மரச் சாமான்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும், ஒடிசா பட்டச் சித்ரா, வார்லி, கோண்ட், மதுபனி, மிதிலா உள்ளிட்ட பாரம்பரிய ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.பொருளாதார வசதி குறைந்த கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவாக செயல்படும் ‘நம் பிக்கை’ திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலை ஞர்கள் மற்றும் டெல்லி தஸ்த்கர் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட கைவினைக் கலைஞர்களும் இந்த ஆண்டு பங்கேற்றுள்ளனர். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடை பெறும் இந்த கண் காட்சிக்கு பொதுமக்க ளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img