கோவை நவக்கரையில் உள்ள ஏஜேகே கல்வி நிறுவனங்கள் சார்பில் “கன்னியாகுமரியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் தந்தை” எனப் போற்றப்படும் மறைந்த கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகனின் வாழ்க்கைப்பயணம், கடல் உயிரினங்கள் சார்ந்த அறிவியல் சாதனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் “பெருங்கடல் அறிவு – டாக்டர் ஆர். எஸ். லால் மோகனின் வாழ்வும் மரபுப் பெருமையும்” (தமிழ்) மற்றும் “Oceans of Knowledge: The Life and Legacy of Dr. R. S. Lal Mohan” (ஆங்கிலம்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் தி ரெசிடென்சி டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து, ஏஜேகே கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் மற்றும் செயலாளர், இந்நூலின் ஆசிரியர் பேரா. முனைவர் அஜீத் குமார் லால் மோகன், நூல் உருவாக்கப் பின்னணி, அதன் நோக்கம் மற்றும் அதன் அவசியத்தை விளக்கி உரையாற்றினார்.
பெருங்கடல் அறிவு – டாக்டர் ஆர். எஸ். லால் மோகனின் வாழ்வும் மரபுப் பெருமையும் என்ற இந்த நூலின் தமிழ் பதிப்பை பால பிரஜாபதி அடிகளார் (அய்யாவழி ஆன்மீக தலைவர், சுவாமித்தோப்பு, நாகர்கோவில்) வெளியிட்டு,
டாக்டர் நந்தினி ரங்கசாமி (தலைவர், ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்கள், கோயம்புத்தூர்) முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
ஆங்கில பதிப்பை எல். டேவிட் பர்னபாஸ் (துணைத் தலைவர் மற்றும் செயலாளர், சிஎஸ்ஐ. கோயம்புத்தூர் மறைமாவட்டம்) அவர்கள் வெளியிட்டு,
டாக்டர் டேவிட் வி. ராஜன் (நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர், ஆர்தோ-ஒன் எலும்பியல் சிறப்பு மருத்துவ மையம், கோயம்புத்தூர்) முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
நிறைவாக, பேராசிரியர் பிந்து அஜீத் (இயக்குநர், ஏஜேகே கல்வி நிறுவனங்கள்) நன்றியுரை வழங்கினார்.



