Homeபிற செய்திகள்நாமக்கல்லில் சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

நாமக்கல்லில் சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல், அடுத்த கீரம்பூர் டோல்கேட் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில தலைவர் பாலாஜி வெங்கடேசலு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வேலுசாமி வரவேற்றார். மாநில துணை தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். இதில் சிறுசேமிப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் சிறுசேமிப்பு முகவர்களுக்கு மீண்டும் ஒரு சதவீதம் தரகு தொகை வழங்க வேண்டும். அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்கள் ஏஜெண்ட் புதுப்பித்தலின் போது, காவல்துறை சான்று பெறும் வழிமுறைகள் எளிமையாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மகளிர் மற்றும் நிலை சிறுசேமிப்பு முகவர்களின் வாழ்வாதாரம் காக்கவும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு-ஓய்வு) சரவணன் மற்றும் சிறுசேமிப்பு முகவர்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img