நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்நீ றியம், வண்டிச்சோலை ஊராட்சி, சோலாடா மட் டத்தில், புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் கூறிய தாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறி வித்து, செயல்படுத்தி வருகிறார்கள். நியாய விலைக்கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் தரமான பொருட்களை வழங்கவும், 200 குடும்ப அட்டைதார்கள் ஒரு பகுதியில் இருந்தாலே அவர்களுக்கென நடமாடும் நியாய விலைக் கடை, பகுதி நேர நியாய விலை கடைகளை அமைக்க அறிவுறுத்தியதையும் தொடர்ந்து, நமது மாவட் டத்தில் உதகையில் 6 கடைகளும், கூடலூரில் 2 கடைகளும், குன்னூரில் 7 கடைகளும் என மொத்தம் 15 பகுதி நேரக் கடைகள் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே கோடமலை நியாய விலைக்கடைகள் 579 குடும்ப அட்டை தார்கள் உள்ளனர். சோலாடா மட்டம் பகுதியிலுள்ள பொதுமக்கள் சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள கோடமலை பகுதிக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருவதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறை வேற்றும் விதமாக சோ லாடாமட்டம் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 175 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், குன்னூர் வரு வாய் கோட்டாட்சியர் சதீஷ், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுனிதா நேரு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழக மண்டல மேலாளர் குணசேகர், உதவி மேலாளர் மாரீஸ்வரன், வண்டிச்சோலை ஊராட் சித்தலைவர் மஞ்சுளா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மீனா, குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.