Homeபிற செய்திகள்கல்வி வழங்குவதே உண்மையான அறம்: ராம்ராஜ் காட்டன் கே.ஆர்.நாகராஜ் பேச்சு

கல்வி வழங்குவதே உண்மையான அறம்: ராம்ராஜ் காட்டன் கே.ஆர்.நாகராஜ் பேச்சு

கல்வி வழங்குவது உண்மையான அறம் என்று ராம்ராஜ் காட்டன் உரிமை யாளர் கே.ஆர்.நாகராஜ் பேசினார். ஈரோடு கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளையின் 40 ஆவது நிறுவன நாள் விழா கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் கே.ஆர்.நாகராஜ் பேசியதாவது:

இந்த அறக்கட்டளை 41 அறங்காவலர்களைக் கொண்டு 1983ல் துவக்கப்பட்டது. இதன்கீழ் தற்போது 7 கல்வி நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பகவத் கீதையில் கர்மயோகத்தில் எவர் ஒருவர் மற்றவர்கள் கேட்காமல் உதவி செய்கிறார்களோ அதுதான் அனைத்து புண்ணியங்களுக்கும் தலையானது என்று கூறுகிறது.

இந்த அறங்காவலர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மாணவச் செல்வங்களுக்கு கல்வி வழங்கி வருகின்றனர். 1983இல் ஒவ்வொரு அறங்காவலரும் ரூ.1 லட்சம் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தனர். தற்போதைய பண மதிப்பில் அது ரூ.1 கோடிக்கு இணை ஆகும். இதிலிருந்து அவர்களின் உயர்ந்த எண்ணத்தை புரிந்து கொள்ளலாம்.

உலகில் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது உணவு உடை, கல்வி. அதனால் தான் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர் மதிய உணவுடன் கல்வி வழங்கினார். தற்போதைய முதல்வர் காலை உணவுடன் கல்வியை வழங்குகிறார். உயர் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் ரூபாய் ஆயிரம் மாதம் தோறும் வழங்குகிறார்.

எனவே கல்வியை இந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் எதிர்பார்ப்பின்றி வழங்குவது பாராட்டுக்குரியது. அதே போன்று ஆசிரியர்களும் எதிர்பார்ப்பின்றி மற்றவர்களை உயர்த்தும் பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி வழங்குவதே உண் மையான அறம்.
இவ்வாறு அவர் பேசினார்.

எல்என்டி கன்ஸ்ட்ரக்க்ஷன் கனரக கட்டுமானப் பிரிவு பொது மேலாளர் சதாசிவம், அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் வெங்கடாஜலம், பி.சி.பழனிசாமி, தேவராஜா, இளங்கோ, தங்கவேல் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img