Homeபிற செய்திகள்‘தமிழ் இலக்கியங்களில் சூழலியலும் காலநிலை மாற்றங்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம்

‘தமிழ் இலக்கியங்களில் சூழலியலும் காலநிலை மாற்றங்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம்

பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, தொல்காப் பியர் தமிழாய்வு மையம், இந்திய இலக்கிய ஆய்வுகளுக்கான பன் னாட்டு ஆய்விதழ், தமிழ் அறிதநுட்பியல் உலகாயம், தமிழ்மொழி கலைக்கழகம் லண்டன், வாகை தமிழ்ச் சங்கம் பெரம்பலூர், பூவுலகின் நண்பர்கள், சுற்றுச்சூழல் அமைப்பு சென்னை ஆகிய பல்வேறு அமைப்புகளும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் சூழலியலும் காலநிலை மாற்றங்களும்“ என்ற தலைப்பில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்த் துறைத்தலைவர் முனை வர் கோ.சுகன்யா வரவேற்புரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, சூழலியல் ஆர்வலர்கள் வெற்றிச்செல்வன் கோவை சதாசிவம் ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து கருத்தரங்க அமர்வு சக்தி அறக் கட்டளை நிறுவனர் மிருதுளா நடராஜன் மற்றும் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. இம் மன்றங்களின் பொறுப்பாளர்களான முனைவர் ப.மணிமேகலை, முனைவர் இரா.மாலினி ஆண்டறிக்கையை வழங்கினார்.

சந்திரகாந்தம் தமிழ் மன்றத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வியர்களுக்கும், கட்டுரை யாளர்களும், கருத்தரங்கப் பங்கேற்பாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img