Homeபிற செய்திகள்கனிமொழி எம்.எல்.ஏ., நடவடிக்கையால் தூர்வாரப்படும் கொண்டனூர் தடுப்பணை

கனிமொழி எம்.எல்.ஏ., நடவடிக்கையால் தூர்வாரப்படும் கொண்டனூர் தடுப்பணை

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், 24 வீரபாண்டி ஊராட்சியில் ஆனைகட்டி & கொண்டனூர் கிராமத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தடுப்பணையில் அதிகளவில் வண்டல் மண் தேங்கி, நீர்த்தேக்க திறன் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், விவசாயம், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கான நீர் தேவையும் பாதிக்கப்பட்டது. தடுப்பணையை தூர்வார வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் விவசாயிக ளின் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, தடுப்பணையை தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை மீட்டெடுக்க கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண் டுள்ளார். அந்தப் பணியை அவர் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து கொண் டனூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img