fbpx
Homeபிற செய்திகள்தேனி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு வெற்றி உறுதி; தெற்கு மாவட்ட செயலாளர் பேட்டி

தேனி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு வெற்றி உறுதி; தெற்கு மாவட்ட செயலாளர் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஆண்டிபட்டிக்கு வர இருக்கிறார்.

இதற்கான பிரச்சார இடத்தை பார்வையிட வந்த மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கூறும் போது: பிரச்சாரத்திற்காக வருகை தரும் அமைச்சருக்கு ஆண்டிபட்டி நுழைவாயிலில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும். முதல்வர் தங்க தமிழ் செல்வனை வேட்பாளராக அறிவித்த போதே அவருடைய வெற்றி உறுதி செய்யப்பட்டது. தொண் டர்கள் உற்சாகத்துடன் களப்பணி ஆற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இவருடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப் பினர் மகாராஜன், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராமசாமி, பேரூர் கழகச் செயலாளர் பூஞ்சோலை சரவணன், கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img