கோவை பெரியநாயக் கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அண்ணா பல்கலைக்கழக மண்டலம் 11 உட்பட்ட கல்லூரிகளுகிடையே ஆண்கள் கால்பந்து போட் டிகள் யுனைடெட் கல்விக் குழும வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் மண்டலம் 11 க்கு உட்பட்ட கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 17 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன.

யுனைடெட் கல்வி நிறுவன மைதானத்தில் நடைபெற்ற இப்போட் டியில், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் எஸ்.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களிடம் கைகுழுக்கி முதல் போட்டியை தொடங்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் டாக்டர் சி.ஏ. எம். கைலாஷ் குமார், செயலாளர் வி. அருண்கார்த்திகேயன், யுனைடெட் கல்வி நிறுவன இயக்குஅர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விறுவிறுப்பாக நடை பெற்ற லீக் போட்டிகளின் முடிவில் முதல் அரை இறுதியில் யுனைடெட் பொறியியல் கல்லூரி அணி மற்றும் குமரகுரு பொறியியல் கல்லூரி அணிகள் மோதின.
இதில் குமரகுரு பொறியியல் கல்லூரி அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் இரண்டாவது அரை இறுதியில் எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி அணி மற்றும் ரங்கநாதர் பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. இதில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் யுனைடெட் பொறியியல் கல்லூரி அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் ரங்கநாதர் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தினர்.

இறுதிப் போட்டியில் எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி அணியை 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் குமரகுரு கல்லூரி அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் எஸ். சண்முகம், யுனைடெட் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. கலைச்செல்வன் ஆகியோட் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் டாக்டர் எச். அப்துல் ரவுப், முதல்வர் டாக்டர் கே. கலைச்செல்வன், கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். மைதிலி, மாணவர் நல இயக்குநர் டாக்டர் எஸ். ஷர்மிளா, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் டாக்டர் டி. ஜெகன், உடற்கல்வி இயக்குநர் எச்.சி. பிரதீப் ஆகியோர் ஒருங்கிணைத் திருந்தனர்.



