Homeபிற செய்திகள்3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் வணிகர் சங்கங்கள் வலியுறுத்தல்

3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் வணிகர் சங்கங்கள் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு மற்றும் ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வணிகவரித் துறை இணை ஆணையர் சத்தியதிலகம், துணை ஆணையர் குமரேசன் ஆகியோர் பங்கேற்று, வணிகர்களின் ஜிஎஸ்டி தொடர்பான குறைகளுக்கு விளக்கம் அளித்தனர்.

மாநில அளவில் முதலமைச்சர் தலைமை யிலும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. வணிகர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காண, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்துவோர் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி மதிப்பீட்டு ஆணைகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவு தபால் மூலம் வணிகர்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

வஉசி பூங்காவில் தற்காலிகமாக இயங்கும் காய்கறி மார்க்கெட்டை, ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் கட்டி முடிக்கப் பட்டுள்ள பழைய காய்கறி மார்க்கெட் கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. தற்போதைய மார்க்கெட் காரணமாக அரசு அருங்காட்சியகம், விளையாட்டு மைதானம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
பூங்காவுக்கு வெளியே உள்ள காய்கறி கடைகளில் சந்தைக் கட்டணம் வசூலிப் போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டாயக் கூலி கேட்டு தொழில் நிறுவனங்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியது.

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி மற்றும் நச்சுப் பொருட்களின் அளவைத் தொடர்ந்து பரிசோதித்து அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img