கொழும்பில் இன்டர்நேஷனல் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்ரீராம் கல்யாண மகாலில் நடைபெற்றது. இதில் பல நாடுகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் நடைபெற்றன.
அதன்படி தமிழ்நாட்டில் இருந்து திண்டுக்கல் மதுரை மற்றும் தேனி மாவட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம் நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இதில் 8 முதல் 11 வயது பிரிவில் இராமச்சந்திரன் ஐந்தாவது இடம், 11 வயது முதல் 14 வயது பிரிவில் அகல்யா மூன்றாவது இடமும், திருநேந்திரன் 3வது இடமும், சந்தோஷ் 4வது இடமும், ஸம்ரித்தா 6 வது இடமும் பெற்று சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்தவாசன் மற்றும் செயலர் சுகன்யாகாந்தவாசன், பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி, யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் உதவி முதல்வர் லோகநாதன் சரவணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.