சிமாட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் 17 வயது சிறுமிக்கு சிக்கலான பல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
முன்னதாக சிறுமிக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில், எலும்பில் கூடுதலாக 22 பற்கள் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து முக மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த டாக்டர் ரூபின் எஸ். ஜான் மற்றும் டாக்டர் கௌதம் விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான அறுவை சிகிச்சை குழு, நோயா ளிக்கு பொது மயக்க மருந்தை கொடுத்து கூடுதல் பற்களை அகற்றும் சிகிச்சையை செய்து முடித்தது. இந்த சிகிச்சையை சவீதா மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
இம்மருத்துவமனை யின் டாக்டர்கள் குழு நடத்திய வெற்றிகரமான அறுவை சிகிச்சை பல் அறுவை சிகிச்சையின் முன்னேற்றங்கள் மற்றும் சிக்கலான நிகழ்வுகளை திறம்பட கையாளும் திறனை எடுத்துக்காட்டி உள்ளது.