கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
இதில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் இந்திய தேசத்தை காப்பதற்காக பல்லாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ததை நினைத்து அஞ்சலி
செலுத்தினர்.
தொடர்ந்து இவ்விழாவில் கல்லூரி முதல்வர் கற்பகம் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வினை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார்.