fbpx
Homeபிற செய்திகள்ரியல்மீ நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மீ நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மீ நார்சோ 70 ப்ரோ 5G ஸ்மார்ட் போன் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகமாகியுள்ளது. இது இந்தியாவின் முதல் 50MP சோனி IMX890 கேமராவை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மூலம் பிரமிக்க வைக்கும், பிலர்-ஃப்ரீ போட்டோ எடுக்க பயன்படுகிறது.

ஸ்மார்ட் போனின் விஷுவல் முறையீடு ஹாரிஜன் கிலாஸ் வடிவமைப்பு மற்றும் 120Hz அல்ட்ரா-ஸ்மூத் அமோலேட் டிஸ்ப்ளே ஆகியவற்றால் உயர்த்தப்பட்டுள்ளது. இது பிரம்மிப்பு மிக்க கலர்ஸ் மற்றும் டீப் பிளாக் கலருடன் வழங்குகிறது.

இந்த பிரிவில் முதலில், ரியல்மீ நார்சோ 70 ப்ரோ ஆனது ஏர் கெஸ்சர் கட்டுப்பாடுகளை உள்ளடக்கி, திரையைத் தொடாமல் பல்வேறு செயல்களைச் செய்ய அனுமதிக்கிறது. தீவிர பயன்பாட்டின் போது வெப்பத்தை திறம்படவைக்கும் 3D iC கூலிங் சிஸ்டத் துடன் வருகிறது.

மேலும் கிலாஸ் கிரீன் மற்றும் கிலாஸ் கோல்ட் மற்றும் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில், 8GB+128 GB விலை ரூ.19,999 மற்றும் 8GB +256GB விலை ரூ.21,999 கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img