Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மன்றம் துவக்கம்: ‘தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள அறிவுரை’

ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மன்றம் துவக்கம்: ‘தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள அறிவுரை’

ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 33-வது மாணவர் மன்றத் தொடக்க விழா நடந்தது. சிறப்பு விருந்தினர், பெங்களூருவில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய வாட்சன் தொழில் நுட்பப் பயிற்சி துறைத் தலைவர் சிவக் குமார் நாராயணசுவாமி, மன்றத் தேர்தலில் வென்றவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசியதாவது:
மாணவிகள் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ற கற்றல் மனப்பாங்கையும் டிஜிட்டல் திறன்களையும் உள்வாங்க வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா பேசும்போது, திறமைகளோடு வாழ்க்கை யின் எல்லா நிலைகளிலும் தேவைப்படக் கூடிய நன்மதிப்புகளுடன் கூடிய தலை மைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மன்றப் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் கல்லூரி அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img